ஹாலிவுட்

திரையரங்குகள் திறப்பு: அக்.23 அன்று இந்தியாவில் வெளியாகும் ‘ஃபோர்ஸ் ஆஃப் நேச்சர்’

ஐஏஎன்எஸ்

திரையரங்குகள் திறக்கப்பட்டதையடுத்து மெல் கிப்ஸன் நடித்துள்ள ‘ஃபோர்ஸ் ஆஃப் நேச்சர்’ திரைப்படம் வரும் அக்.23 அன்று இந்தியாவில் வெளியாகிறது.

கடந்த வியாழன் (அக். 15) முதல் டெல்லி, ஹரியானா, மேற்கு வங்கம், குஜராத், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள திரையரங்குகள் திறக்கப்பட்டன. இவற்றில் ‘தப்பட்’, ‘கேதர்நாத்’, ‘தன்ஹாஜி’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டன.

மஹாராஷ்டிரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் மெல் கிப்ஸன் நடித்த ‘ஃபோர்ஸ் ஆஃப் நேச்சர்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் டிவிடி மற்றும் ப்ளூ ரே டிஸ்க்குளில் உலகம் முழுவதும் வெளியானது. வெளியான போது சரியான வரவேற்பை பெறாத நிலையில், இப்படம் இந்தியாவில் வரும் அக். 23ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் எமிலி ஹிர்ஸ்ச், கேட் போஸ்வொர்த், டேவிட் ஸயாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT