கரோனா தடுப்பு ஆய்வுகளுக்காக மீண்டும் பிளாஸ்மா தானம் செய்துள்ளார் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்
கடந்த மார்ச் மாதம் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா வில்சன் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை டாம் ஹாங்க்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். டாம் ஹாங்க்ஸ் ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டது.
டாம் ஹாங்க்ஸ் கரோனா வைரஸால் பாதிப்பட்டிருந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கும் அவரது மனைவி ரீடாவுக்கும் ஆறுதல் கூறி வந்தனர். பின்னர் கரோனா சிகிச்சை முடிந்ததும் டாம் ஹாங்க்ஸ் மற்றும் ரீடா இருவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் டாம் ஹாங்க்ஸ் மற்றும் ரீடா இருவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சைக்காக தங்கள் இரத்தத்தை கொடுத்தனர்.
இந்நிலையில் தற்போது கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளுக்காக இரண்டாவது முறையாக மீண்டும் ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளதாக டாம் ஹாங்க்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு மருந்துக்காக பிளாஸ்மா தானம் செய்யும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் டாம் ஹாங்க்ஸ். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.