ஹாலிவுட்

கரோனா வைரஸ் நிவாரணத்துக்காக ஹாரி பாட்டர் எழுத்தாளர் ரூ.9.40 கோடி நிதி உதவி

செய்திப்பிரிவு

ஹாரி பாட்டர் கதைகள் மூலம்உலகளவில் மிகவும் புகழ்பெற்றவர் லண்டனைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங். இவர் எழுதிய ஹாரி பாட்டர் வரிசை நாவல்கள் லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தன. இந்த நாவல்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வசூலில் சாதனையும் படைத்தன.

இந்நிலையில் அவர் கரோனா வைரஸ் நிவாரண நிதியாக ஒரு லட்சம் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.40 கோடி)வழங்குவதாக நேற்று அறிவித்தார்.

54 வயதான ஜே.கே.ராவ்லிங் கூறும்போது, “இந்த நிதியை கரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்காகவும், அகதிகள் நலப்பணிகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கரோனா பிரச்சினையால் வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்காக இந்த நிதியை பயன்படுத்த வேண்டும்” என்றார்.

கடந்த மாதம் கரோனா அறிகுறிகள் இருந்ததால் ராவ்லிங்தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 2 வாரங்களுக்குப் பின்னர் தான் குணமடைந்ததாக ராவ்லிங் அறிவித்தார்.

SCROLL FOR NEXT