2020, 2021 ஆகிய வருடங்களில் இந்தியாவில் வெளியாகவுள்ள மார்வல் சூப்பர் ஹீரோ படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
2008-ம் ஆண்டு 'அயர்ன் மேன்' திரைப்படத்துடன் மார்வல் சூப்பர் ஹீரோக்களின் மார்வல் சினிமா உலகம் ஆரம்பமானது. தொடர்ந்து 'ஹல்க்', 'தார்', 'கேப்டன் அமெரிக்கா' என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டு அந்தக் கதாபாத்திரங்கள் வாழும் உலகம் என தனியாகச் சித்தரிக்கப்பட்டது.
மூன்று கட்டங்களாக மொத்தம் 23 படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இதில் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம் உலகத் திரை வரலாற்றில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
மூன்றாவது கட்டம் மார்வல் படங்கள் முடிந்தவுடனேயே அடுத்த கட்டத்துக்கான அறிவிப்பு பற்றி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு அந்த அறிவிப்பும் வெளியானது. தற்போது 2020, 2021 ஆகிய வருடங்களில் இந்தியாவில் வெளியாகவுள்ள மார்வல் சூப்பர் ஹீரோ படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தேதிகள் பின்வருமாறு
பிளாக் விடோ - ஏப்ரல் 30
எடர்னல்ஸ் - நவம்பர் 6
ஷாங் ஜி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் டென் ரிங்க்ஸ் - பிப்ரவரி 12, 2021
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (இரண்டாம் பாகம்) இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ் - மே 7, 2021
தார் (நான்காம் பாகம்) லவ் அண்ட் தண்டர் - நவம்பர் 5