'பாஃப்டா' விருது விழாவில் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 11 விருதுகளை ‘1917’ திரைப்படம் பெற்றுள்ளது.
73-வது பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் (பாஃப்டா) விருதுகள் வழங்கும் விழா லண்டனின் இன்று (03.02.2020) நடைபெற்றது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
முதலாம் உலகப்போரை அடிப்படையாகக் கொண்டு ‘ஒரே ஷாட்’டில் எடுக்கப்பட்ட ‘1917’ திரைப்படம் சிறந்த பிரிட்டிஷ் படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட 7 விருதுகளை வென்றது. இந்த ஆண்டு அதிக பாஃப்டா விருதுகளைக் குவித்த திரைப்படம் இதுவாகும்.
சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசை, நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட மூன்று விருதுகள் ஹாக்கிங் ஃபீனிக்ஸ் நடித்த ‘ஜோக்கர்’ திரைப்படத்துக்குக் கிடைத்துள்ளன.
சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த வெளிநாட்டுப் படம் ஆகிய இரண்டு விருதுகள் கொரியப் படமான 'பாரஸைட்’ படத்துக்குக் கிடைத்துள்ளன.
சிறந்த நடிகை - ரெனீ ஸெல்வேகர்
சிறந்த நடிகர் - ஹாக்கிங் ஃபீனிக்ஸ்
சிறந்த துணை நடிகர் - லாரா டெர்ன்
சிறந்த துணை நடிகர் - ப்ராட் பிட்
சிறந்த அறிமுக இயக்குநர், கதாசிரியர் - பெய்ட்
சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை - ஜோஜோ ராபிட்
சிறந்த ஆடை வடிவமைப்பு - லிட்டில் வுமன்
10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட 'தி ஐரிஷ்மேன்' திரைப்படத்துக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.