டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தின் அடுத்த பாகத்தில், மார்வல் சினிமா உலகத்துக்கான புது கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்படும் என மார்வல் ஸ்டூடியோஸ் தலைவர் கெவின் ஃபைஜி கூறியுள்ளார்.
'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், கதாநாயகனாக மீண்டும் பெனடிக்ட் கம்பர்பேட்ச் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய ஸ்காட் டெரிக்ஸன் இயக்குகிறார். இந்தப் படம் பற்றி சமீபத்தில் பேசிய மார்வல் ஸ்டூடியோஸ் தலைவர் கெவின் ஃபைஜி, "அடுத்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தில் சில புதிய எம்சியூ கதாபாத்திரங்கள் முதல் முறையாக தோன்றவுள்ளன. அது யார் என்று உங்களால் எதிர்பார்க்கவோ, யூகிக்கவோ முடியாது.
ஆனால் அதற்கான சிறந்த வழியை நாங்கள் இனம் கண்டுள்ளோம். ஏனென்றால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைக் கொண்டு வர வேண்டும் என்று எப்போதிலிருந்தோ நினைத்து வருகிறோம், அவர் அதில் சரியாக பொருந்துவார்.
மேலும் இது ஹாரர் படமாக இருக்காது. ஆனால் பயப்படும்படியான சில காட்சிகள் இருக்கும். கொடூரமான காட்சிகள் காட்டி பயமுறுத்தாமல் மகிழ்ச்சியாக பயப்படுவது நன்றாக இருக்கும். ஸ்காட் டெரிக்கஸன் அதில் கை தேர்ந்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- பிடிஐ