ராபர்ட் டவுனி ஜூனியர் தொகுத்து வழங்கும் ஒரு புதிய வெப் சீரிஸை யூட்யூப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மார்வெல் காமிஸின் புகழ்பெற்ற ’அயர்ன்மேன்’ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலமடைந்தவர் ராபர் டவுனி ஜூனியர். 2008ஆம் ஆண்டு வெளியான ’அயர்ன்மேன்’ முதல் பாகம் முதல் ‘அவெஞ்சர்ஸ்: தி எண்ட் கேம்’ வரை மொத்தம் 8 படங்களில் அயர்ன்மேனாக நடித்துள்ளார். இவரது உண்மையான பெயரே மறக்கும் அளவுக்கு ‘டோனி ஸ்டார்க்’ என்ற பெயராலயே ரசிகர்களால அழைக்கப்பட்டார்.
இந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: தி எண்ட் கேம்’ படத்தில் அயர்ன்மேன் இறந்துவிட்டதால் இனிவரும் மார்வெல் படங்களில் ராபர்ட் டவுனி நடிப்பாரா என்ற கேள்வியை மார்வெல் ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் யூ ட்யூப் நிறுவனம் தயாரித்துள்ள ’ஏஜ் ஆஃப் ஏ. ஐ’ எனப்படும் வெப் சீரிஸை தொகுத்து வழங்கியுள்ளார் ராபர்ட். ஆர்ட்டிஃபீஸியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் தொழில்நுட்பம் உருவான விதம், எதிர்காலத்தில் அது மனிதகுலத்துக்கு உதவப்போகிறது என்பது குறித்து பேசுகிறது இந்த சீரிஸ். பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்களும், பொறியாளர்களும் ஏ.ஐ குறித்து விவரிக்கின்றனர்.
மொத்தம் 8 பகுதிகளாக உருவாகியுள்ள இந்த சீரிஸில் இதுவரை இரண்டு பகுதிகளை யூ ட்யூப் வெளியிட்டுள்ளது.