ஹாலிவுட்

உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் - அக்‌ஷய் குமார் நான்காம் இடம்

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்

2019ஆம் ஆண்டில் உலகில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நான்காம் இடத்தில் உள்ளார்.

2019ஆம் ஆண்டில் உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் ஹாலிவுட் நடிகர் ’தி ராக்’ என்று அழைக்கப்படும் ட்வேய்ன் ஜான்ஸன் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய இந்த ஆண்டுக்கான சம்பளம் 89.4 மில்லியன் டாலர்கள்.

அவெஞ்சர்ஸ் படங்களில் தோன்றும் தோர் எனப்படும் சூப்பர் ஹீரோவாக நடித்த க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இவரது சம்பளம் 76.4 மில்லியன் டாலர்கள் ஆகும்.

அதே அவெஞ்சர்ஸ் படங்களில் அயர்மேனாக நடித்த ராபர்ட் டவ்னி ஜூனியர் மூன்றாம் இடத்திலும், ராக்கெட் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த ப்ராட்லீ கூப்பர் ஆறாம் இடத்திலும், கேப்டன் அமெரிக்காவாக நடித்த க்ரிஸ் எவான்ஸ் எட்டாம் இடத்திலும் ஆண்ட் மேனாக நடித்த பால் ரூட் ஒன்பதாம் இடத்திலும் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் முழு பட்டியல் கீழ் வருமாறு:

1. ட்வேய் ஜான்ஸன் (89.4 மில்லியன் டாலர்கள்)

2. க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் (76.4 மில்லியன் டாலர்கள்)

3. ராபர்ட் டவ்னி ஜூனியர் (66 மில்லியன் டாலர்கள்)

4. அக்‌ஷய் குமார் (65 மில்லியன் டாலர்கள்)

5. ஜாக்கி சான் (58 மில்லியன் டாலர்கள்)

6. ப்ராட்லி கூப்பர் ($57 மில்லியன் டாலர்கள்)

7. ஆடம் சாண்ட்லர் ($57 மில்லியன் டாலர்கள்)

8. க்ரிஸ் எவான்ஸ் ($43.5 மில்லியன் டாலர்கள்)

9. பால் ரூட் ($41 மில்லியன் டாலர்கள்)

10. வில் ஸ்மித் ($35 மில்லியன் டாலர்கள்)

- ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT