கடந்த 14 வருடங்களாக அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து வசூலை அள்ளிக் கொண்டிருக்கும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் 7-வது பாகம் ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் இந்தப் படம் இந்தியாவில் வெளியாகிறது. இந்தச் செய்தியை யூனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
வின் டீசல், மறைந்த பால் வாக்கர், 'ராக்' ஜான்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில், 7-ஆம் பாகத்தில், 'டிரான்ஸ்போர்டர்' நாயகன் ஜேஸன் ஸ்டாதம் இணைந்துள்ளார். இந்திய நடிகர் அலி ஃபாசல் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
'ப்ரயன் ஓ கானர்' என்ற பாத்திரத்தில் நடித்த பால் வாக்கரின் மறைவுக்குப் பின் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஸா', 'கான்ஜூரிங்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் வான் இந்த பாகத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படம் குறித்து பேசிய வான், "ஒரு பிரம்மாண்டமான படத்தை இயக்கும்போது படப்பிடிப்பு தளங்கள் பிரம்மாண்டமாக இருக்கும், படத்தை எடுக்க நிறைய நேரமும், முயற்சியும், கலைஞர்களும் தேவைப்படுவார்கள். ஆனால் இந்தப் படம் கண்டிப்பாகப் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என நினைக்கிறேன். நான் இயக்கியதிலேயே கடினமான படம் இது, ஆனால் பெருமைக்குரிய படமும் இதுவே" என்றார்.
படத்தின் புதிய ட்ரெய்லர்
</p>