ஹாலிவுட்

சிண்ட்ரெல்லா பாத்திரத்தில் நடிக்க மகாத்மா காந்தியைப் பற்றி படித்தேன்: லில்லி ஜேம்ஸ்

ஐஏஎன்எஸ்

வெளியாகவுள்ள டிஸ்னியின் 'சிண்ட்ரெல்லா' படத்தின் நாயகி, அந்த பாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள யோகா செய்ததாகவும், மகாத்மா காந்தியைப் பற்றி படித்ததாகவும் கூறியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற சிண்ட்ரெல்லா கதையை 1950-ஆம் ஆண்டு கார்டூன் படமாக வெளியிட்ட டிஸ்னி, மீண்டும் அதை கையிலெடுத்துள்ளது. இதில் சிண்ட்ரெல்லா பாத்திரத்தில் லில்லி ஜேம்ஸ் என்ற நடிகை நடித்துள்ளார்.

இந்த பாத்திரத்தில் நடிக்க தன்னை தயார்படுத்திக் கொண்ட விதத்தைப் பற்றி அண்மையில் அவர் பேசியுள்ளார்.

"படப்பிடிப்பு துவங்க 6 வாரங்கள் இருக்கும் போது குதிரை ஏற்ற பயிற்சியைப் பெற்றேன். ஆரோக்கியமாக இருக்க யோகா பயிற்சி மேற்கொண்டேன். சிண்ட்ரெல்லா என்ற பாத்திரத்தின் நளினத்தை, அழகை சரியாக பிரதிபலிக்க இந்தப் பயிற்சி உதவியது.

ஆன்மிகத்தைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். எளிமையாக வாழ்ந்த காந்தியைப் போன்றவர்களைப் பற்றி படித்தேன். சிண்ட்ரெல்லா என்ற வெறும் பாத்திரமாக மட்டும் அல்லாமல், அனைத்தும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்." இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

சிண்ட்ரெல்லா வரும் மார்ச் மாதம் 20-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT