'ஐயர்ன் மேன்', 'ஹல்க்', 'ஸ்பைடர் மேன்', 'கேப்டன் அமெரிக்கா', 'எக்ஸ் மென்' உள்ளிட்ட மார்வல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களின் வரிசையில் 'ஆன்ட் மேன்' என்ற அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமும் தயாராகியுள்ளது.
உடலின் அளவை சிறிதாக மாற்றி, அதே நேரத்தில் முழு பலத்துடனும் இருக்க முடியும் என்கிற தொழில்நுட்பத்தை விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கிறார். அந்தத் தொழில்நுட்பத்தை வில்லன்களிடமிருந்து ஹீரோ காப்பாற்றும் வழக்கமான அம்புலிமாம கதையே 'ஆன்ட் மேன்'. ஆனாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், கிராபிக்ஸிலும் ட்ரெய்லர் மிரட்டுகிறது.
பால் ருட் நாயகனாக நடிக்க, மைக்கேல் டக்ளஸ் விஞ்ஞானியாக நடிக்கிறார். வரும் ஜூலை மாதம் இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.