ஹாலிவுட்

‘அவதார்’ படத்தில் நடிக்க மறுத்த நடிகரை திட்டித் தீர்த்த ஜேம்ஸ் கேமரூன்

ஐஏஎன்எஸ்

‘அவதார்’ படத்தில் நடிக்க மறுத்ததால் தன்னை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் திட்டியதாக நடிகர் ஜோஷ் பிராலின் கூறியுள்ளார்.

‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் தானோஸ் வேடத்தில் நடித்துள்ள ப்ராலின், இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "’அவதார்’ படத்தில் நடிக்க வேண்டாம் என நினைத்தால், நினைத்ததுதான். ஆனால் அதற்காக ஜேம்ஸ் கேமரூன் என்னை கண்டபடி திட்டினார். இப்போது அவர் வந்து 'ஏன் இப்படி பேட்டி தந்தாய்?' எனக் கேட்டால், 'அப்படி நடந்தது, அதனால் சொன்னேன்' என்று பதிலளிப்பேன்"

‘அவெஞ்சர்ஸ் 4’ மற்றும் டெட்பூல் படத்தின் இரண்டாம் பாகம் என தொடர்ந்து ப்ராலின் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT