தனக்கு கூச்சம் அதிகம் என்பதால், நிஜ வாழ்க்கையில் தான் தலைமறைவானவனைப் போல உணர்வதாக நடிகர் ஜானி டெப் தெரிவித்துள்ளார்.
'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படங்கள் மூலம் உலகளவில் புகழ்பெற்ற நடிகர் ஜானி டெப், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது
"எனக்கு கூச்சம் அதிகம். என்னால் எல்லோருடனும் சகஜமாக பேச முடியாது. மறைவில் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மற்றவர்களை கவனிப்பதற்கான வாய்ப்பு எனக்கு குறைவு, ஏனென்றால் நான் நடிகன் என்பதால் என்னை எப்போதும் யாரேனும் கவனித்துக் கொண்டே இருக்கின்றனர்.
என்னால் 'பைரட்ஸ் ஆஃப்தி கரிபீயன்' பாத்திரத்திலிருந்து என்னை பிரித்துப் பார்க்க முடியவில்லை. தெரியாமல் பந்தயத்தில் மாட்டிக் கொண்டு வெற்றி பெற்றவனைப் போல என் நிலை ஆகிவிட்டது. இதனால் என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. வெற்றி பெற்ற அந்த நொடியிலிருந்தே நான் ஒரு சந்தைப் பொருளைப் போல மாற்றப்பட்டுவிட்டேன் "
இவ்வாறு ஜானி டெப் கூறியுள்ளார்.