ஹாலிவுட்

டங்கிர்க் - கிறிஸ்டோபர் நோலன் எடுத்ததில் சுருக்கமான படம்

பிடிஐ

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படமான 'டங்கிர்க்'கின் ஓட்ட நேரம் 1 மணிநேரம் 47 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது. நோலன் இதுவரை எடுத்த படங்களில் குறைந்த ஓட்ட நேரம் கொண்ட படமாக டங்கிர்க் அமைந்துள்ளது.

'இண்டர்ஸ்டெல்லார்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் படம் 'டங்கிர்க்'. இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. டாம் ஹார்டி, மார்க் ரைலன்ஸ், ஹாரி ஸ்டைல்ஸ் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்தின் ஓட்ட நேரம் 1 மணிநேரம் 47 நிமிடங்கள் எனத் தெரியவந்துள்ளது. இது 'இண்டர்ஸ்டெல்லார்' படத்தை விட கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குறைவாகும்.

நோலன் எடுத்த படங்களில் நீளமானது இண்டர்ஸ்டெல்லார். 2 மணி நேரம் 49 நிமிடங்கள் அப்படம் ஓடியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT