ஹாலிவுட்

குழந்தைகளுக்காக ஏஞ்சலினாவுடன் உறவைப் புதுப்பிக்க விரும்பும் பிராட் பிட்

ஐஏஎன்எஸ்

தங்களின் ஆறு குழந்தைகளுக்காக, ஏஞ்சலினா ஜோலியுடனான தனது உறவைப் புதுப்பிக்க எண்ணியுள்ளார் பிராட் பிட்.

மேடாக்ஸ் (15), பேக்ஸ் (13), ஸகாரா (11), ஷிலோ (10) மற்றும் இரட்டையர்கள் நாக்ஸ் மற்றும் விவியன் (8) ஆகிய ஆறு குழந்தைகளுக்காக ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து வாழ பிராட் பிட் விரும்புவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏஞ்சலினா தன்னை எவ்வளவு காயப்படுத்தி இருந்தாலும், குழந்தைகளின் நலனுக்காக பிராட் பிட் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்.

இருவரும் சேர்ந்து மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்வதே குழந்தைகளுக்குச் சிறப்பானதாக இருக்கும் என்று பிராட் பிட் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,

பிரிவுக்குப் பிறகு, குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது என்ற மோதலில் இருவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT