ஹாலிவுட்

பாஃப்டா விருதுகளிலும் சாதித்த லா லா லேண்ட்

பிடிஐ

'லா லா லேண்ட்' திரைப்படம் 5 பாஃப்டா விருதுகளை வென்றது. பிரிட்டிஷ் - இந்திய நடிகர் தேவ் படேல் சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.

பிரிட்டிஷ் அகாடமி சினிமா விருதுகளான 70வது பாஃப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் 'லா லா லேண்ட்' திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகை (எம்மா ஸ்டோன்), சிறந்த இயக்குநர் (டேனியல் சாஸெல்), சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு என அதிகபட்சமாக ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றது.

'மான்செஸ்டர் பை தி ஸீ' படத்தில் நடித்த கேஸீ அஃப்லெக் சிறந்த நடிகராகவும், 'ஃபென்சஸ்' படத்தில் நடித்த வயோலா டேவிஸ் சிறந்த உறுதுணை நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய - பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் (ஸ்லம்டாக் மில்லியனர் பட நாயகன்) 'லயன்' படத்துக்காக சிறந்த உறுதுணை நடிகர் விருதை வென்றார்.

'லா லா லேண்ட்' திரைப்படம் நடக்கவிருக்கும் ஆஸ்கர் விழாவில் 14 பரிந்துரைகளைப் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT