ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார்.
ஹாங்காங்கை சேர்ந்த நடிகர் ஜாக்கி சான் (62) ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானார். தற்காப்பு கலை, நகைச்சுவை கலந்த சண்டை காட்சிகளால் குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிக ரானார். ‘டிராகன் லார்டு’, ‘புராஜக்ட் ஏ’, ‘போலீஸ் ஸ்டோரி’, ‘சூப்பர் காப்’, ‘பர்பிடன் கிங்டம்’ ‘ஹூ ஏம் ஐ’, ‘தி மித்’, ‘ஷாங்காய் நைட்ஸ்’, ‘தி டக்ஸீடோ’, ‘ரஷ் ஹவர்’‘தி கராத்தே கிட்’உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
எனினும், உலகின் மிகப்பெரிய திரைப்பட விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது இதுவரை ஜாக்கி சானுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதுக்கு அவர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை, ‘தி அகடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்’ கடந்த வியாழக் கிழமை அறிவித்தது.
தனது 8 வயதில் இருந்து நடித்து வரும் ஜாக்கி சான், தற்காப்பு கலையை மையப் படுத்தி ஹாங்காங்கில் 30 படங் களை எடுத்துள்ளார். நடிகராக மட்டுமன்றி, எழுத்தாளர், தயாரிப் பாளர், இயக்குநர், பாடகர் என பல துறைகளில் தனது திறமையை பதிவு செய்துள்ளார் ஜாக்கி சான்.
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் 2-வது நடிகர் ஜாக்கி சான் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபல ‘போர்ப்ஸ்’ பத்திரிகை பட்டியலிட்டிருந்தது.
இவருடன் ஆவணப்பட தயாரிப்பாளர் பிரட்ரிக் வைஸ்மேன், இங்கிலாந்து திரைப்பட எடிட்டர் ஆன்னி வி.கோட்ஸ், காஸ்ட்டிங் டைரக்டர் லின் ஸ்டால்மாஸ்டர் ஆகியோரும் 2016-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவம்பர் மாதம் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் இவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது.