ஆக்ஷன் ஸ்டார் அர்னால்டு ஸ்வார்ஷ்நெகர், தன்னுடைய தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது யானை ஒன்றால் துரத்தப்பட்ட திகில் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
68 வயதான நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்நெகர், தென் ஆப்பிரிக்காவில் தனது குழுவுடன் பயணித்த போது, யானை ஒன்றால் வழிமறிக்கப்பட்டு, துரத்தப்பட்ட அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
''யானை துரத்தலை படமாக எடுத்திருந்தால் கூட இத்தனை சிறப்பாக இருந்திருக்காது'' என்று தலைப்பிட்டு வீடியோவைப் பதிவேற்றியுள்ளார் அர்னால்டு.
அந்த வீடியோவில், எதிரே வந்த யானையைத் திடுக்குறச் செய்யாமல் இருக்க, ஓட்டுநர் வண்டி என்ஜினை அணைக்கிறார். திரும்பவும் அவர் காரை ஸ்டார்ட் செய்யும்போது யானை பின்வாங்க ஆரம்பிக்கிறது.
ஒரு பயணி, ''என்ஜினை ஆன் செய்ததால் யானை போய் விட்டதா'' என்று கேட்கிறார்.
அர்னால்டு, ''இல்லை அது நம்மை தாக்கப் போகிறது!'' என்கிறார்.
என்ன நடந்தது..? காணொளியைக் காணுங்கள்.
</p><p xmlns="">மேலும் ''நான் இயற்கையின் படைப்புகளை எண்ணி வியக்கிறேன். நாம் விலங்குகளைக் கொல்வதை நிறுத்த வேண்டும். அவற்றுடன் புகைப்படம் எடுங்கள். கொல்ல முயற்சிக்காதீர்கள். யானையின் அழகை, பிரமாண்டத்தை கண்டு ரசியுங்கள். தந்தத்தை திருட நினைக்காதீர்கள்'' என்றும் கூறியுள்ளார் அர்னால்டு.</p>