ஆஸ்கர் விருது விழாவின் ரெட் கார்பெட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்க, 8 வயது இந்திய சிறுவன் சன்னி பவாரின் மழலை சிரிப்போ அனைவரையும் கவர்ந்து இழுத்தது.
'ஸ்லம்டாக் மில்லியன்' புகழ் தேவ் பட்டேல் நடித்து பல்வேறு விருதுகளை அள்ளிய 'லயோன்' திரைப்படத்தில் சிறுவயது தேவ் பட்டேலாக நடித்துள்ளார் சுனில் பவார்.
'லயோன்' படத்தில் தன் நடிப்பால் பலரையும் கவர்ந்த சன்னி பவார், ஆஸ்கர் விழாவிலும் பல பிரபலங்களின் பாராட்டுகளுக்கும் அன்பான தழுவல்களுக்கும் சொந்தமாகியிருக்கிறார்.
'லயோன்' படம் வெளிவந்து பல்வேறு தரப்பின் பாராட்டுகளைப் பெற்றதுடன் சுனில் பவாரின் நடிப்புக்கு சுனில் பவார் ஆஸ்கர் விருது ஹாலிவுட் ரசிகர்கள் தங்களது இதயத்தை பரிசாகக் கொடுத்துள்ளனர் என்பதை ட்விட்டரில் #sunnypawar ட்ரெண்டிங்கில் கடந்த சில நாட்கள் உலா வருவதன் மூலம் சன்னிக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிமெல் உடன் சன்னி பவார்
இந்த ஆண்டின் ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிமெல் சன்னி பவாருடன் மேற்கொண்ட நகைச்சுவையான உரையாடல் பலரால் யூ டியூப் தளங்களில் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆஸ்கர் விருது காரணமாக கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சன்னி தனது ஆசையாக டபிள்யு டபிள்யு எஃப் நட்சத்திரங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுருந்தார்.
இறுதியில் சன்னியின் ஆசையும் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது 'லயோன்' திரைப்படம் தந்த வெளிச்சம்.
டபிள்யு டபிள்யு எஃப் (WWF) வீரருடன் சன்னி பவார்.