லண்டனில், கடந்த ஞாயிறு அன்று ராகுட்டன் டிவி எம்பையர் விருதுகள் 2018 விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜுராசிக் பார்க் படத்தின் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு ''எம்பயர் லெஜண்ட் ஆப் அவர் லைப்டைம்'' விருது வழங்கப்பட்டது.
இவ்விருதை ஏற்றுக்கொண்ட புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ''என்னை லெஜண்ட் என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ஒரு இயக்குநராகவே என்னை உணர்கிறேன்'' என்று கூறினார்.
விழாவில் அவர் பேசியது:
அவர்கள் என்னை லெஜண்ட் என்று அழைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அதேநேரம் லெஜண்ட் என்ற சொல்லோடு இணைத்து வழங்கப்படும் இவ்விருதை பெற்றுக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் லெஜண்ட் என்பதைவிட ஒரு சாதாரண திரைப்பட இயக்குநராகவே என்னை நான் உணர்கிறேன், அவ்வளவுதான். எனக்கு ஏராளமான விருதுகள் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை எவற்றையும் என் வீட்டுக்கு எடுத்துச் செல்வது கிடையாது. இதை நான் வேலை செய்யும் என்னுடைய அலுவலகத்திலேயே வைத்துவிடுவேன். நன்றி''
இவ்வாறு தனது ஏற்புரையில் ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பேசினார்.