ஹாலிவுட்

சென்னையில் பேட்ட, விஸ்வாசம் வசூலை முறியடித்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்

ஸ்கிரீனன்

'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தின் முதல் நாள் வசூல், 'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களின் வசூலைத் தாண்டியது.

2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழ்த் திரையுலகில் வெளியான பல படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதனால், விநியோகஸ்தர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்கள், வசூலை வாரிக் குவித்தன. ஆனால், தொடர் ஓட்டத்தில் தமிழகத்தில் 'விஸ்வாசம்' படத்தின் வசூலே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 'பேட்ட' 1.12 கோடி ரூபாயும், 'விஸ்வாசம்' 88 லட்ச ரூபாயும் முதல் நாளில் வசூலித்தது. இந்த இரண்டையுமே முந்தியுள்ளது 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தின் வசூல். முதல் நாளில் 1.17 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

சென்னையில் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' மர்றும் 'மெர்சல்' ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை, இதுவரை எந்தவொரு படமுமே தாண்டவில்லை. இதற்கு ஒரு காரணமுள்ளது. என்னவென்றால், இரண்டு படங்களுக்கும் போட்டியாக எந்தவொரு படமுமே வெளியாகவில்லை. தனியாக வெளியானதால் மட்டுமே, முதல் நாளில் இரண்டு படங்களுமே சுமார் 2 கோடி ரூபாய் சென்னையில் வசூலித்தது.

விஷாலின் எதிர்ப்பு

ஹாலிவுட் படங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பதிவில், "ஆண்டுக்கு ஒரு முறையே வரும் ஆங்கிலப் படத்துக்கு இருக்கும் இத்தகைய அறிவிப்பு, வாராவாரம் வந்து குவியும் தமிழ்ப் படங்களுக்கும் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று திரையரங்கு உரிமையாளரின் பதிவுக்கு சாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT