ஹாலிவுட்

2019 ஆஸ்கரைத் தொகுத்து வழங்குகிறார் நடிகர் கெவின் ஹார்ட்

செய்திப்பிரிவு

2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவை நடிகரும் காமெடியனுமான கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குகிறார்.

ஆஸ்கர் விருது திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படுகிறது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இவ்விழாவைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கெவினுக்குக் கிடைத்துள்ளது.

இதுகுறித்துக் கூறியுள்ள கெவின், ''நான் வானத்தில் பறக்கிறேன். ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்குவது என்னுடைய வாழ்நாள் கனவாக இருந்தது. மேதைகள் அலங்கரித்த இந்த மேடையில், நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாற உள்ளதை என்னாலேயே நம்ப முடியவில்லை.

இந்த ஆண்டு ஆஸ்கரை மேலும் சிறப்பான ஒன்றாக மாற்றிக் காட்டுவேன்'' என்று தெரிவித்துள்ளார்.

39 வயதான கெவின், 'ரைட் அலாங்', 'ஜுமாஞ்சி - வெல்கம் டூ த ஜங்கிள்' மற்றும் 'நைட் ஸ்கூல்' உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஆவார்.

2005 மற்றும் 2016-ல் ஆஸ்கார் விழாவைத் தொகுத்து வழங்கிய மார்ட்டின் லாரன்ஸ் மற்றும் க்ரிஸ் ராக் ஆகியோர் கெவினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT