ஹாலிவுட்

டிச.25-ல் வெளியாகிறது ‘அனகோண்டா’!

செய்திப்பிரிவு

ஜெனிபர் லோபஸ் நடித்து 1997-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் ஆக்‌ஷன் அட்வென்சர் படம், ‘அனகோண்டா’. உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது இந்த படம்.

‘அனகோண்டா’ படங்களின் வரிசையில் 6-வது படம் இப்போது உருவாகியுள்ளது. ‘அனகோண்டா’ என்ற பெயரில் உருவாகி இருக்கும் இதை, டாம் கோர்மிகன் இயக்கியுள்ளார். ஜாக் பிளாக், பால் ரூட், ஸ்டீவ் ஜான், தாண்டிவே நியூட்டன், டேனிலா மெல்ச்சியர், செல்டன் மெல்லோ உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக் ஷன் அட்வென்சர் மற்றும் நகைச்சுவையுடனும் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

          

டக் (ஜாக் பிளாக்), கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு இதன் கதை நகர்கிறது. நீண்ட கால நண்பர்களான இருவரும் தங்களுக்குப் பிடித்த அட்வென்சர் திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் ராட்சத அனகோண்டா அவர்களின் ஆர்வத்தை முறியடிக்கிறது. ஒரு கட்டத்தில் படம் எடுப்பதை விட உயிர் பிழைக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. இந்தப் படம் டிச.25 அன்று தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT