ஹாலிவுட்

இந்தி படங்களை பின்னுக்குத் தள்ளி ‘சூப்பர்மேன்’ வசூல் சாதனை!

ப்ரியா

இந்தியாவில் வெளியான 3 நாட்களில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது ஹாலிவுட் படமான ‘சூப்பர்மேன்’.

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் கடந்த ஜூலை 11 அன்று வெளியான ‘சூப்பர்மேன்’ திரைப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை வெளியான ‘சூப்பர்மேன்’ படங்களின் வசூலை எல்லாம் இப்படம் முறியடித்துள்ளது.

படத்தின் மொத்த பட்ஜெட் 225 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் வெளியான இரண்டு நாட்களிலேயே இப்படம் 217 மில்லியன் டாலர் வசூலித்துவிட்டது. டிசி காமிக்ஸ், வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்களுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவிலும் ‘சூப்பர்மேன்’ படம் குறிப்பிடத்தக்க வசூல் சாதனை செய்துள்ளது. இதற்கு முன் வெளியான டிசி படங்களின் வசூலை விட 55 சதவீதம் அதிக வசூலை இப்படம் செய்துள்ளது. மேலும் கடந்த வாரம் வெளியான ‘மாலிக்’, ’ஆங்கோன் கி குஸ்தான்கியான்’ போன்ற இந்தி படங்களை பின்னுக்குத் தள்ளி ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT