ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1981ஆம் ஆண்டு வெளியான ’இண்டியானா ஜோன்ஸ்: த ரைடர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க்’ திரைப்படம் உலகமெங்கும் பெரும் வெற்றி பெற்றது. இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து 'இண்டியானா ஜோன்ஸ்: டெம்பிள் ஆஃப் டூம்’ (1984), ’இண்டியானா ஜோன்ஸ்: த லாஸ்ட் க்ருஸேட்’ (1989), இறுதியாக ’இண்டியானா ஜோன்ஸ்: கிங்டம் ஆஃப் த க்ரிஸ்டல் ஸ்கல்’ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது இண்டியானா ஜோன்ஸின் 5ஆம் பாகம் 2021ஆம் வெளியாகும் என டிஸ்னி அறிவித்துள்ளது.
இதுவரை வெளியான 4 இண்டியானா ஜோன்ஸ் படங்களையும் இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே இந்த படத்தையும் இயக்குகிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரை இண்டியானா ஜோன்ஸாக நடித்த ஹாரிஸன் ஃபோர்ட் தான் இதிலும் ஹீரோ. அவருக்கு தற்போது வயது 75.
படத்தின் தாமதத்திற்கு காரணம் எதுவும் டிஸ்னி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
எனினும் 2021 வரை டிஸ்னி கைவசம் ரால்ஃப் ப்ரேக்ஸ் த இண்டெர்நெட்’(2018), ராக் நடிக்கும் ’ஜங்கிள் க்ரூஸ்’ (2019), ஏஞ்சலினா ஜோலி நடிக்கும் ‘மேல்ஃபீசியன்ட் 2’ (2020), பெயரிடப்படாத மார்வெல் திரைப்படம் (2021) ஆகிய படங்கள் இருப்பதே தாமதத்துக்கு காரணம் என்று தெரிகிறது.
எப்படியோ 13 வருடங்களுக்கு பிறகு இண்டியானா ஜோன்ஸை பெரிய திரையில் பார்க்கப்போகும் ஆவல் இப்போதே ஜோன்ஸ் ரசிகர்களை தொற்றிக் கொண்டு விட்டது