ஹாலிவுட்

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம்! 

செய்திப்பிரிவு

லண்டன்: திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரும் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கவுரவித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் சாதனை புரியும் அல்லது நாட்டுக்காக சேவை செய்யும் தனி நபர்களுக்கு இங்கிலாந்து மன்னர் அல்லது ராணியால் ‘சர்’ பட்டம் (நைட்ஹுட்) வழங்கப்படுகிறது. இதைப் பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்பு ‘திரு’ என்பதற்கு பதில் ‘சர்’ என போட்டுக்கொள்ளலாம். இந்த வகையில் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கும், அவரது மனைவிக்கும் ‘சர்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நோலனின் பெரும்பாலான படங்களுக்கு அவரது மனைவி தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் ‘சர்’ பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இது தொடர்பாக இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாம்ஸன் ‘சர்’ பட்டத்தால் கவுரவிக்கப்படுகிறார்கள். ’தி டார்க் நைட்’, ‘ஓப்பன்ஹைமர்’ போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களை இணைந்து தயாரித்து திரையுலகில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியதற்காக இந்த தம்பதியினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது, நோலன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஓப்பன்ஹைமர்’ படம் குறித்த தனது பாராட்டை இளவரசர் சார்லஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT