ஹாலிவுட்

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் கைது

செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டரான்டினோவின் ரிசர்வையர் டாக்ஸ், கில்பில்: வால்யூம் 2, தி ஹேட்புல் எய்ட், ஒன்ஸ் அபான் டைம் இன் ஹாலிவுட் உட்படபல படங்களில் நடித்திருப்பவர் மைக்கேல் மேட்சன். கலிபோர்னியாவின் மலிபு பகுதியில் வசித்து வரும் இவர், தனது மனைவி டியன்னாவுடன் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் மனைவியை வீட்டை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டிவிட்டார். இதுதொடர்பான புகாரைஅடுத்து போலீஸார், அவரை மீட்டனர். இது தொடர்பாக மைக்கேல் மேட்சன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT