ஜானி வாக்டர் 
ஹாலிவுட்

நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக் கொலை: திருடர்களை பிடிக்க முயன்றபோது சோகம்

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் தனது வீட்டில் திருட வந்தவர்களை பிடிக்க முயன்றபோது நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2007ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘ஆர்மி ஒய்வ்ஸ்’ தொலைகாட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜானி வாக்டர் (37). தொடர்ந்து ‘வெஸ்ட்வேர்ல்ட்’, ‘ஸ்டேஷன் 19’, ‘ஹாலிவுட் கேர்ள்’ உள்ளிட்ட தொடர்களிலும் நடித்தார். ‘ஜெனரல் ஹாஸ்பிடல்’ தொடர் மூலம் பிரபலமானார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை 3 மணியளவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜானி வாக்டர் வீட்டில் மர்ம நபர்கள் மூன்று பேர், காரின் உதிரி பாகங்களை திருட முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த ஜானி வாக்டர், அந்த திருடர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது நடந்த சண்டையில், ஜானி வாக்டரை அந்த திருடர்கள் துப்பாக்கியுள்ளார் சுட்டுள்ளனர்.

உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஜானி வாக்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருடவந்த மூவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT