‘முஃபஸா: தி லயன் கிங்’ பட ஷாட் 
ஹாலிவுட்

‘Destiny awaits You’ - ‘முஃபஸா: தி லயன் கிங்’ ட்ரெய்லர் எப்படி?

செய்திப்பிரிவு

நியூயார்க்: ‘முஃபஸா: தி லயன் கிங்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. தி லயன் கிங் பட வரிசையில் இதனை வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 1.32 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ள இந்த ட்ரெய்லர் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1994-ல் ‘தி லயன் கிங்’ அனிமேஷன் திரைப்படம் வெளியானது. 2 ஆஸ்கர் விருதை இந்தப் படம் வென்றது. கடந்த 2019-ல் லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக ‘தி லயன் கிங்’ ரீமேக் வெளியானது. இந்தப் படம் உலக அளவில் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்தது.

இந்த சூழலில் முஃபஸா பாத்திரம் குறித்து விரிவாக பேசுகிறது இந்தப் படம். பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். எதிர்வரும் டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

“இந்த கதை மலைகள் மற்றும் நிழல்களுக்கு அப்பால் ஒளியின் மறுபுறத்தில் இருந்து தொடங்குகிறது. நம் வாழ்வை மாற்றி அமைக்கும் சிங்கம்” என பின்னணியில் ஒலிக்கும் குரலுடன் ட்ரெய்லர் ஆரம்பமாகிறது. அடுத்த காட்சி காட்டுயிர்கள் ஒன்றாக இருப்பதை போல அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பனி போர்த்திய சூழலும் அறிமுகமாகிறது.

‘Destiny awaits You’ என்ற குரல் பின்னணியில் ஒலிக்க முஃபஸாவின் பாய்ச்சல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வீடியோ லிங்க்...

SCROLL FOR NEXT