ஹாலிவுட்

தேவ் படேலின் ‘மங்கி மேன்’ இந்திய ரிலீஸ் மாற்றம் ஏன்?

செய்திப்பிரிவு

மும்பை: ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் பிரபலமான, தேவ் படேல், இயக்குநராக அறிமுகமாகும் ஹாலிவுட் படம், ‘மங்கி மேன்’. இதில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

நாயகியாக சோபிதா துலிபாலா நடிக்கிறார். இவர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக நடித்தவர். இவர் தவிர, சிக்கந்தர் கெர், விபின் சர்மா, அஸ்வினி கல்சேகர், மார்க்கண்ட் தேஷ்பாண்டே உட்பட மேலும் சில இந்திய நடிகர்கள் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட ஆக்‌ஷன் படமான இது, வரும் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் இந்திய ரிலீஸ் தள்ளிப் போகிறது. படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதால், அதற்கு இந்திய தணிக்கைக்குழு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் அதற்கு கால அவகாசம் ஆகும் என்றும் கூறப்படுகிறது. அதனால், படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்தபின் 26-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT