ஹாலிவுட்

ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் மீது தாக்குதல்

செய்திப்பிரிவு

ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் (58). இவர் பிளாட்டூன், வால் ஸ்ட்ரீட், யங் கன்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மலிபு நகரில் வசித்து வருகிறார். இவர் பக்கத்து வீட்டில் வசிப்பவர், எலெக்ட்ரா ஷ்ராக் (47). சார்லியின் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்கியுள்ளார். பின்னர் அவர் சட்டையை கிழித்து, கழுத்தை நெரித்துக் கொல்லவும் முயன்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸார் அவரை கைது செய்தனர். இதுபற்றி மேலும் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT