ஹாலிவுட்

ஆஸ்கர் விருது பரிந்துரைகளை அறிமுகம் செய்கிறார் பிரியங்கா சோப்ரா 

செய்திப்பிரிவு

நடப்பு ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைகளை அறிமுகப்படுத்தவிருக்கிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அரங்கில் அழகாக உலா வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகளை மேடையில் இருந்து அறிவிக்கவிருக்கிறார்.

ஆஸ்கர் பரிந்துரைகளை அறிமுகப்படுத்தும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஆஸ்கர் அகாடமி பகிர்ந்திருந்தது. அந்த புகைப்படத்தின் கீழ் "பிரியங்கா சோப்ராவுடன் ஆஸ்கர் பரிந்துரைகள் அறிமுக நிகழ்ச்சியை செவ்வாயன்று காணுங்கள்" எனப் பதிவிடப்பட்டிருந்தது.

பிரியங்கா சோப்ராவைத் தவிர ரோசாரியோ டாசன், ரெபல் வில்சன், மிச்செல் யியோ, மிச்செல் ரோட்ரிக்ஸ் ஆகியோரும் இந்த வருடத்துக்கான ஆஸ்கர் பரிந்துரைகளை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

SCROLL FOR NEXT