ஹாலிவுட்

6 மாதத்துக்கு முன் நடிகர் மாயமான இடத்தில் மனித உடல்

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பிரிட்டன் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் (65). ‘தி கில்லிங் ஃபீல்ட்ஸ்’, ‘எ ரூம் வித் எ வியூ’, ‘வார்லாக்’, ‘லீவிங் லாஸ் வேகாஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 13-ம் தேதிஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள சான் கேப்ரியல் மலைத்தொடரில் மலையேற சென்றார். பின்னர் அவர் மாயமானார்.

அங்குள்ள மவுண்ட் பால்டி பகுதியில் கடைசியாக காணப்பட்ட அவர் எங்கு சென்றார் எனத்தெரியவில்லை. அவரை தேடும் பணியில் 80-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. மோசமான வானிலை மற்றும் கடுமையான பனிச்சரிவு காரணமாகத் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அங்கு மலையேற சென்ற சிலர், ஒரு உடல் கிடப்பதைக் கண்டனர். உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஜூலியன் சாண்ட்ஸ் மாயமான இடத்திலேயே அந்த உடல் கிடைத்ததால், அது அவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT