நியூயார்க்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘அவதார்’. மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. வசூலிலும் சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் அடுத்த பாகம், ‘அவதார் : தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் 2022-ம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. இந்தப் படமும் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் அடுத்தடுத்தப் பாகங்கள் உருவாகி வந்தன.
இந்நிலையில் அந்தப் படங்களின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி, தள்ளி வைத்துள்ளது. அதன்படி ‘அவதார் 3’ டிச. 19, 2025- க்கும் ‘அவதார் 4’ டிச. 21, 2029-ம் ஆண்டும் வெளியிடப்படும். ‘அவதார் 5’ டிச.19, 2031-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.