பாலிவுட்

“ஆக்‌ஷன் ஹீரோ முத்திரைதான் வேண்டும்” - வித்யுத் ஜம்வால் விருப்பம்

நிலா

தமிழில், துப்​பாக்​கி, அஞ்​சான், மதராஸி ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், இந்தி நடிகர் வித்​யுத் ஜம்​வால். இவர் ‘ஸ்ட்​ரீட் பைட்​டர்’ என்ற ஹாலிவுட் ஆக் ஷன் படத்​தில் தால்​சிம் என்ற கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். புகழ்​பெற்ற வீடியோ கேமை அடிப்​படை​யாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இப்​படத்தை கிட்​டாவோ சகு​ராய் இயக்​கி​யுள்​ளார்.

இதில் நோயா சென்​டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கல்​லினா லியாங், ஜோ அனோய், டேவிட் தாஸ்த்​மால்​சி​யன், கோடி ரோட்​ஸ், ஆண்ட்ரூ ஷூல்ட்​ஸ், எரிக் ஆண்ட்ரே ஆகியோ​ரும் நடித்​துள்​ளனர். இந்த அதிரடி சாகசப் படம் ஆங்​கிலம், இந்​தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் அக். 16-ல் வெளியாகிறது.

இப்​படத்​துக்​காக உடல் ரீதி​யான பயிற்​சிகளை விட, மற்ற அனைத்​துக் கதா​பாத்​திரங்​களின் சண்டை முறை​களை​யும் முழு​மை​யாகப் புரிந்து கொள்ள வேண்​டி​யிருந்​தது என்று வித்​யுத் ஜம்​வால் தெரி​வித்​துள்​ளார்.

அவர் மேலும் கூறும்​போது, “தால்​சிம் மோதிய ஒவ்​வொரு கதா​பாத்​திர​மும் எவ்​வாறு சண்​டை​யிடு​கிறார்​கள் என்​ப​தைப் பார்க்க வேண்​டி​யிருந்​தது. பார்த்​த​தால் படப்​பிடிப்​பில் அது மிக​வும் உதவி​யாக இருந்​தது. இதன் மூலம் ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​தை​யும் என்​னால் தெரிந்து கொள்ள முடிந்​தது. இதில் நடித்​தது சிறந்த அனுபவம். எனது திரை வாழ்க்​கை​யின் தொடக்​கத்​திலிருந்தே என்​னுடன் இருக்​கும் ‘ஆக் ஷன் ஹீரோ’ முத்​திரை குறித்து கேட்​கிறார்​கள்.

அப்​படிச் சொல்​வதற்​காக நான் கவலைப்​பட​வில்​லை. எனது சண்​டைத் திறனுக்​காகவே நான் அடை​யாளம் காணப்பட வேண்​டும் என்று விரும்​பினேன். அப்​படித்​தான் முத்​திரைக் குத்​தப்பட வேண்​டும் என்​றும் நினைத்​தேன். வித்​யுத் என்​றால் சண்​டைக்​காட்​சிகள் என்று அனை​வரும் சொல்ல வேண்​டும் என்​றும் விரும்​பினேன். இறு​தி​யாக நான் நினைத்த அந்த இடத்தை அடைந்​து​விட்​டேன். அதனால்​தான் ஹாலிவுட்​டில் இருந்து ‘ஸ்ட்​ரீட் ஃபைட்​டர்’ படக்​குழு அழைத்​து, அப்​படத்​தில் என்​னை​யும் ஓர் அங்​க​மாக்​கி இருக்கிறது” என்​றார்.

SCROLL FOR NEXT