பாலிவுட்

ஏஐ நிறுவனத்துக்கு எதிராக ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு: ஊர்வசி ரவுதெலா முடிவு

நிலா

பிரபல இந்தி நடிகையான ஊர்​வசி ரவுதெலா, தமிழில் ‘லெஜண்ட்’ படத்​தில் நாயகி​யாக நடித்​திருந்​தார். இவர், தனது பெயர், புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோ ஆகிய​வற்றை அனு​ம​தி​யின்றி பயன்​படுத்​து​வ​தாகக் கூறி, லாஸ் ஏஞ்​சல்ஸை சேர்ந்த செயற்கை நுண்​ணறிவு நிறு​வனத்​துக்கு எதி​ராக வழக்​குத் தொடுக்க இருப்​ப​தாகக் கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து அவரது குழு, “உரிய அனு​ம​தி​யின்றி ஊர்​வசி​யின் பெயர், புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோக்​களை உங்​கள் நிறு​வனத்​தின் பயன்​பாட்​டுக்கு எடுத்​துக்​கொள்​ளக் கூடாது. தற்​போது ரூ.7,000 கோடியை இழப்​பீ​டாகக் கோரு​வது உள்​ளிட்ட சட்ட நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறோம்” என்று தெரி​வித்​துள்​ளது.

ஏ.ஐ மூலம், பிரபலங்​களின் போலி வீடியோக்​கள் உரு​வாகி வரு​வ​தாக​வும் வணிக நோக்​கங்​களுக்​காக திரை​ நட்​சத்​திரங்​களின் புகைப்படங்​களை அனு​ம​தி​யின்றி பயன்​படுத்தி வரு​வ​தாக​வும் புகார்​கள் எழுந்​துள்ள நிலை​யில் ஊர்​வசி ரவுதெலா இழப்​பீடு கோர இருப்​ப​தாகக் கூறி​யிருப்​பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்​கிறது.

SCROLL FOR NEXT