பாலிவுட்

“விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற முடியாது” - நடிகை தமன்னா கருத்து

நிலா

நடிகை தமன்னா, இந்​தி​யில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்திரீ 2’ படத்​தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு ஆடி​யிருந்​தார். இப்​பாடல் வரவேற்​பைப் பெற்ற நிலை​யில் பாலிவுட் நடிகர் அன்னு கபூர், அப்​பாடல் பற்றி பேசும்​போது தமன்​னாவின் தோற்​றத்தை வர்​ணித்​தது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. அவர் தமன்​னாவை உரு​வக்​கேலி செய்​வ​தாகப் பலரும் விமர்​சித்​தனர்.

இச்​சம்​பவம் குறித்து தமன்​னாவிடம் இப்​போது கேட்​டபோது, “ஒரு திரைக்​கலைஞராக, நான் செய்ய வேண்​டிய முக்​கிய​மான வேலை கவனிப்​ப​து​தான். அப்​படி கவனிக்​கும் போது, ​​எதை மனதில் வைத்​துக்​கொள்ள வேண்​டும், எதைப் புறக்​கணிக்க வேண்​டும் என்​ப​தைப் புரிந்​து​கொள்​வது அவ​சி​யம்.

மேலும், ஒரு பெண்​ணாக, விமர்​சனங்​களுக்கு முக்​கியத்​து​வம் கொடுக்​கத் தொடங்​கினால், முன்​னேறிச் செல்ல முடி​யாது.

அத​னால் இதுபோன்ற விஷயங்​களை கவனிப்​ப​தில்லை. என் நடிப்​புத் தொழி​லில் மட்​டுமே கவனம் செலுத்து​கிறேன். உண்​மையைச் சொல்​லப்​போனால், நான் என் வேலையை சேவை​யாகச் செய்ய விரும்​பு​கிறேன். அதைத்​தான் செய்து​கொண்​டும் இருக்​கிறேன். அந்த நேர்​மையின் காரண​மாகவே என் நடிப்பு மக்​களைச் சென்​றடைகிறது” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT