பாலிவுட்

இந்தியில் ரீமேக் ஆகிறது ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’: ஜன.19-ல் படப்பிடிப்பு தொடக்கம்

ஸ்டார்க்கர்

இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகிறது ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’ ரீமேக். ஜனவரி 19-ல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’. உலகளவில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதன் கதையமைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு இந்திக்கு தகுந்தாற் போல் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் அனீஷ் பாஸ்மி.

ஜனவரி 19-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தில் ராஜு தயாரிக்கவுள்ள இப்படத்தில் அக்‌ஷய்குமார், வித்யா பாலன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

2025-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’. அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த ஆக்‌ஷன் கதையாக இப்படம் வெளியானது. ‘கேம் சேஞ்சர்’ படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தினை இப்படத்தின் வெற்றியே கைக்கொடுத்தது என்று தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டியொன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT