பாலிவுட்

‘பேட்டில் ஆஃப் கல்வான்’ பெயர் மாற்றம்

ப்ரியா

சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்டில் ஆஃப் கல்வான்’ படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய- சீன பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தின் பின்னணியில் ‘பேட்டில் ஆஃப் கல்வான்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகி யுள்ளது.

          

இதில் சல்மான் கான், கர்னல் சந்தோஷ் பாபுவாக நடித்துள்ளார். அபூர்வா லக்கியா இயக்கியுள்ள இப் படத்தில், சித்ரங்கடா சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்திய வீரர்களின் துணிச்சலை காட்டும் விதமாக உருவாக்கியுள்ள இப்படம் ஏப். 17-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்துக்கு இதன் ரிலீஸ் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே இப்படத்தின் டைட்டிலை, ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ என்று மாற்றி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT