பாலிவுட்

‘ராமாயணா’ படத்​தில் சீதையாக நடித்தது பற்றி விமர்​சனம்: சாய் பல்லவி கருத்து

நிலா

நிதேஷ் திவாரி இயக்​கி​யுள்ள ‘ராமாயணா’ படத்​தில் சீதையாக நடித்​திருக்​கிறார் சாய் பல்​லவி. நவ.5-ல் வெளியான இப்​படம் வசூல் சாதனை படைத்து வரு​கிறது. இதில் சீதையாக நடிப்பதற்குச் சாய் பல்​லவி சரியான தேர்​வல்ல என்​றும் அவரது தோற்​றம் குறித்​தும் பாலிவுட் பிரபலங்​கள் பலர் கருத்து தெரிவித்துள்​ளனர். சமூக வலை​தளங்​களி​லும் இது தொடர்​பான விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன. இந்​நிலை​யில் மும்​பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் கலந்து கொண்ட சாய் பல்லவியிடம் இதுபற்றி கேட்​கப்​பட்​டது.

அவர் கூறும்​போது, ‘‘சீதை, எப்​படி அழகாக இருக்க வேண்​டும் என்பது போன்ற சமூக வலை​தளக் கருத்​துகளை நான் பார்க்கிறேன். ஆனால், இதுபோன்ற விமர்​சனங்​கள் நம்​முடைய மன உறுதியை உலுக்​கும் என்​றால் நம்மை இன்​னும் வலுப்படுத்திக் கொள்ள வேண்​டும்.

ஒரு​வர் எவ்​வளவு உறுதி​யாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு உறுதி​யாக இருக்​கிறேன். கருத்​துகள் என்​பவை வெறும் கருத்​துகள் மட்​டுமே. எனவே, வளரும் பரு​வத்​தில் தாழ்வு மனப்​பான்மை அல்​லது பாது​காப்​பற்ற உணர்வு இருந்​தால், நீங்​கள் வலிமையைப் பெற்​றுக்​கொள்ள வேண்​டும்.

அப்​போது​தான் இந்த உல​கத்தை எதிர்​கொள்​ளவோ ​​அல்​லது தேவையற்ற விமர்​சனங்களைப் புறக்​கணிக்​கவோ உங்​களால் முடியும். சினிமாவில் வெறும் கவர்ச்​சி​யான கதாபாத்​திரங்​களில் நான் நடிக்க விரும்​புவதில்லை. ஏற்​கும் வேடங்​களில் வலிமையும் ஆழமும் இருக்க வேண்​டும். வணிக ரீதி​யான படங்​களில் நடிப்பதற்​குப் பதிலாக, அர்த்​தமுள்ள கதா பாத்​திரங்​களுக்​காகத் தொடக்​கத்​தில் நான்கு முதல் ஐந்து ஆண்​டுகள் பொறுமையுடன் காத்​திருந்​தேன்” என்று கூறியுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT