பாலிவுட்

நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ - ராமர் அறிமுக வீடியோ எப்படி?

ப்ரியா

மும்பை: இந்தியத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும், நிதேஷ் திவாரியின் 'ராமாயணா' திரைப்படத்தின் ராமர் அறிமுக டீசர் வீடியோ இன்று வெளியானது. 

டீசர் எப்படி? - டீசரின் தொடக்கத்தில் ‘இது நம் வரலாறு, நம் உண்மை’  என்ற கேப்ஷன்கள் வருகின்றன. காட்சிகள் நவீன சிஜிஐ தொழில்நுட்பத்தின் அதீத பயன்பாட்டால் சற்று செயற்கையாகத் தெரிந்தாலும், ராமராக ரன்பீர் கபூர் திரையில் தோன்றியவுடன் டீசரின் டோன் மாறுகிறது.

          

பாலகாண்டம் முதல் ஆரண்ய காண்டம் வரையிலான பயணத்தை இந்த முதல் பாகம் விவரிக்கும் என்று தெரிகிறது. தொழில்நுட்ப பிரம்மாண்டங்களுக்கு நடுவே, ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். அவரது தோற்றம் மற்றும் நடிப்பு குறித்த சந்தேகங்களுக்கு இந்த டீசர் ஒரு வலுவான பதிலடி கொடுத்துள்ளது எனலாம்.

டீசரின் இறுதியில் காட்டப்படும் புஷ்பக விமானத்தின் நுணுக்கமான வடிவமைப்பு, படத்தின் கலைவடிவமைப்புக்கு சான்றாக அமைந்துள்ளது. ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் பின்னணி இசை, காட்சிகளின் பிரம்மாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. 

டீசரின் இறுதியில் ராவணனின் ஒரு சிறிய தோற்றம் காட்டப்படுவது, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. முழுமையான விவரங்கள் எதையும் வெளியிடாமல், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் இந்த டீசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் மெருகேற்றப்பட வேண்டியிருந்தாலும், சமூக வலைதளங்களில் இந்த டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் ஆண்டின் இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் வீடியோ: 

SCROLL FOR NEXT