பாலிவுட்

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? - ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

நிலா

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக இருக்​கிறது. நிதேஷ் திவாரி இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் சூர்ப்​பணகை​யாக நடித்​திருக்​கிறார் ரகுல் ப்​ரீத் சிங்.

தனது கதாபாத்​திரம் குறித்து அவர் கூறும்​போது, “இந்​தப் படம் இந்​தி​யாவை உல​குக்கு முன்​னிறுத்​தும் முயற்சி. நமது கலாச்​சா​ரத்தை உல​களாவிய பார்​வை​யாளர்​களுக்​குக் கொண்டு சேர்க்​கும் வாய்ப்​பாக இதைப் பார்க்​கிறேன். இதில் தவறாகப் புரிந்து கொள்​ளப்​பட்ட, அதே நேரம் பல பரிமாணங்​களைக் கொண்ட ஒரு கதாபாத்​திரம் சூர்ப்​பணகை. அவளால்​தான் போரே தொடங்​கியது.

எனவே, இத்​தகைய பல பரிமாணங்​களைக் கொண்ட ஒரு கதாபாத்​திரத்​தில் நடிப்​பது சுவாரஸ்ய​மாக இருந்​தது. வரலாற்​றில் அவர் ஒரு குறிப்​பிட்ட நிகழ்​வுக்​காக மட்​டுமே அறியப்​படு​கிறார்; ஆனால் அவரது கதையில் இன்​னும் பல விஷயங்​கள் உள்​ளன. ஒரு நடிகை​யாக, மக்​களின் பார்​வையை மாற்​றும் சவாலான கதாபாத்​திரங்​களில் நடிப்​பது மிகுந்த உற்​சாகத்தைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT