பாலிவுட்

இந்திய சினிமாவில் அதீத வன்முறை: நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்

செய்திப்பிரிவு

தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி ஆகிய படங்களில் நடித்திருப்பவர், இந்தி நடிகையான ராதிகா ஆப்தே. லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞர் பெனடிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயானார்.

இவர் இப்போது அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் காட்டப்படும் அதீத வன்முறை, தன்னை மிகவும் பாதிப்பதாகக் கூறியுள்ளார்.

அவர் கூறும்​போது, “இந்​திய சினி​மா​விலும் ஓடிடி தளங்​களி​லும் வன்​முறை அதி​கரித்து வரு​கிறது. ரத்​தக்​களரி​யான காட்​சிகள் மற்​றும் அதிக வன்​முறையைக் கொண்ட கதைகள் இப்​போது அனைத்து வரம்​பு​களை​யும் தாண்​டி​விட்​ட​தாக உணர்​கிறேன். உடல் உறுப்​பு​களைச் சிதைக்​கும் ஒரு​வரின் கதையை சொல்ல விரும்​பி​னால், அவர்​கள் செய்​யும் கொடூர​மான விஷ​யங்​களை அப்​படியே செய்​வது போல காண்​பிக்​கத் தேவை​யில்​லை. அது சரி​யான கதை சொல்​லலும் இல்​லை.

இது​போன்ற வன்​முறை​களைப் படங்​களில் காட்​டி​னால் சமூகத்​தில் அதன் தாக்​கம் பாதிப்பை உண்​டாக்​கும். இது மாதிரி​யான சூழலில் என் குழந்​தையை வளர்க்​கப் பயமாக இருக்​கிறது.

பார்​வை​யாளர்​களுக்​குத் தொடர்ந்து வன்​முறையை வழங்​கு​வதன் மூலம், அதை இயல்​பாக்​கு​கின்​றனர். மக்​கள் அதைத்​தான் பார்க்க விரும்​பு​கிறார்​கள் என்று சொல்​வது மிகுந்த வருத்​தத்​தைத் தரு​கிறது. திரைப்​படங்​களில் காட்​டப்​படும் அதீத வன்​முறை, கலாச்​சா​ரம் மற்​றும் சிந்​தனையைப் பா​திக்​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT