பிரபல இந்தி நடிகையான நுஷ்ரத் பருச்சா, தமிழில் சேது, சந்தானம் நடித்த ‘வாலிப ராஜா’ படத்தில் நடித்துள்ளார். இவர் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்புக்காகவும் விடுமுறைக்காகவும் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சில நாட்களுக்கு முன் சென்றார். அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.
இதில் அவர் முதுகு தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நுஷ்ரத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்; அவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. அவரை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குணமடைய அவகாசம் தேவைப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.