நடிகை காஜல் அகர்​வால்

 
பாலிவுட்

காஜல் அகர்​வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’க்கு எதி​ராக நோட்​டீஸ்

நிலா

காஜல் அகர்​வால், ஷ்ரே​யாஸ் தல்​படே நடித்​துள்ள திரைப்​படம், ‘தி இந்​தியா ஸ்டோரி’. சேட்​டன் டிகே இயக்​கி​யுள்​ளார். சாகர் பி ஷிண்டே எழு​தித் தயாரித்​துள்​ளார்.

இந்​தி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளி​யாகிறது. இதன் டீஸர் மற்​றும் விளம்பரங்களில் இந்​திய விவ​சா​யம், பால் உற்​பத்தி குறித்து ஆதா​ரமற்ற, தவறான தகவல்​கள் இடம் ​பெற்​றுள்​ள​தாகக் கூறி பவேஷ் சோதா என்ற தொழில​திபர் சார்​பில் படக்​குழு​வுக்கு வழக்​கறிஞர் ஹிரண்யா பாண்டே நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளார்.

பூச்​சிக்​கொல்லி பயன்​பாடு, பால் கலப்​படம், கோழி வளர்ப்பு மற்றும் புற்​று​நோய் அதி​கரிப்பு தொடர்​பாக முன்​வைக்​கப்​பட்​டுள்ள தகவல்​களுக்கு போது​மான அறி​வியல் ஆதா​ரங்​கள் இல்லை என்றும் இது​போன்ற காட்​சிகள் விவ​சா​யிகள் மற்​றும் உணவு உற்பத்​தித் துறை​யின் நற்​பெயருக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் என்றும் அந்த நோட்​டீஸில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, “உணவுக் கலப்​படத்​தால் பாதிக்​கப்​பட்ட இந்​தி​யக் குடும்​பத்​தின் கதையைத்​தான் இப்​படம் பேசுகிறது. அன்​றாட வாழ்​வில் அனை​வரை​யும் பாதிக்​கும் முக்​கிய​மான பிரச்சினையை மக்​களிடம் கொண்டு சேர்ப்​பதே இந்​தப் படத்​தின் நோக்​கம்” என்று இயக்​குநர் சேட்​டன் டிகே தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT