இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘தும்பார்ட்’. ராஹி அனில் பார்வே இயக்கிய இந்த ஹாரர் திரைப்படம் பாலிவுட்டில் வரவேற்பைப் பெற்றது. இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் நவாசுதீன் சித்திக் நாயகனாக நடிக்கிறார்.
சோஹும் ஷா, பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இதில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தில் நடிப்பது பற்றி நவாசுதீன் சித்திக் கூறும் போது, ‘‘தும்பார்ட்’ படத்தின் தனித்துவமான கதை சொல்லும் முறை எப்போதும் பிடிக்கும்.
இந்த அற்புதமான குழுவுடன் இணைந்து அந்த மர்ம உலகுக்குள் நுழைய ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தமிழில் சித்தா, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மிஷன்: சாப்டர் 1, டிஎன்ஏ படங்களில் நடித்துள்ள மலையாள நடிகையான நிமிஷா சஜயன், இந்தியில் ஏற்கெனவே சில படங்களில் நடித்துள்ளார்.