பாலிவுட்

‘உடல் ஆரோக்கியம் பற்றி யாரும் கற்றுக் கொடுப்பதில்லை’ - நடிகர் மிலிந்த் சோமன் வருத்தம்

நிலா

தமி​ழில் ‘பச்​சைக்​கிளி முத்​துச்​சரம்’, ‘பையா’, ‘வித்​தகன்’, ‘டாக்​டர்’ உள்​பட சில படங்​களில் நடித்​திருப்​பவர் மிலிந்த் சோமன். நிகழ்ச்சி ஒன்​றில் கலந்​து​ கொண்ட அவர், ஆரோக்​கிய​மாக வாழ்​வது பற்றி இந்​தி​யாவில் யாரும் கற்​றுக்​கொடுப்​ப​தில்லை என்று வருத்​தம் தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “எப்​படி ஒரு வேலையை பெறு​வது, அலு​வல​கத்​தில் எப்​படி வேலை செய்​வது என்​பது மட்​டுமே இங்கு கற்​றுக் கொடுக்​கப்​படு​கிறது. ஒரு சமூக​மாக இதில்​தான் கவனம் செலுத்து​கிறோம். வாழ்க்​கை​யில் முக்​கிய​மான 2 விஷயங்​கள், ஆரோக்​கியமும் மகிழ்ச்​சி​யும். ஆனால், இதைப் பற்றி யாருமே கற்​றுக் கொடுப்​ப​தில்லை.

எனது 9 வயது முதல் 23 வயது வரை வாரத்​துக்கு சுமார் 65 கி.மீ நீச்​சல் பயிற்சி மேற்​கொண்​டிருந்​தேன். தேசிய அளவில் சாம்​பியன் பட்​டம் வென்​றிருக்​கிறேன். மாடலிங் துறைக்கு வந்த பிறகு சில காலம் என் பழக்க வழக்​கங்​கள் திசை மாறின. புகைப்​பழக்​கத்​துக்​கும் மது பழக்​கத்​துக்​கும் அடிமையானேன்.

குடித்​து​விட்டு வீட்​டுக்கு வரும்​போது எனது தாயார் வீட்​டுக்​குள் அனுமதிக்​காமல் கண்​டித்​திருக்​கிறார். ஆனால், 25 ஆண்​டுகளுக்கு முன்பே புகைப்​பழக்​கத்தை முழு​மையாக நிறுத்​தி​விட்​டேன். மதுப்​பழக்​கத்​தில் இருந்​தும் விடு​பட முடிந்​தது. அந்​தச் சூழ்​நிலைகள் எனக்கு வாழ்க்​கையைக் கற்​றுத் தந்த முக்​கிய​மான அனுபவங்​களாக அமைந்​தன.

‘ஃபிட்​னஸ்’ என்​றாலே ஆரோக்​கிய​மான உடலைப் பெற உடற்​பயிற்​சிக் கூடத்​துக்கு செல்ல வேண்​டிய அவ​சி​யமில்லை. அன்​றாட வாழ்​வில் சுறுசுறுப்​பாக இருப்​ப​தும் தினமும் சிறிய உடற்​பயிற்​சி​யைத் தொடர்ந்து செய்​வதுமே போது​மானது. தினசரி நடப்​பது, விளை​யாடுவது அல்​லது எளிய உடல் அசைவு​களில் ஈடு​படுவது அவ​சி​ய​மானது. நீண்​டகால ஆரோக்​கியத்​துக்கு நாம் செய்​யும் முறை​யான தொடர்ச்​சி​யான பழக்க வழக்​கங்​களே முக்கியம்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT