பாலிவுட்

‘லவ் அண்ட் வார்’ முன்னோட்டம்: காதலுக்காக ஒரு யுத்தம்!

செய்திப்பிரிவு

திரைப்படம் என்பது சம்பவங்களால் நிறைந்தது என்கிற புரிதலுடன் பெரும்பாலான இயக்குநர்கள் அதை அணுகுகிறார்கள். ஆனால், அந்தச் சம்பவங்களைப் பெரும் காட்சி விருந்தாகவும் உணர்ச்சிக் காவியமாகவும் மாற்றிக் காட்டுவதில் சஞ்சய் லீலா பன்சாலி தனித்துவமானவர்.

அவரது இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் இணைந்துள்ள முக்கோணக் காதல் கதை ‘லவ் அண்ட் வார்’. இந்த மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தில் இவர்களது கதாபாத்திரங்களின் முதல் தோற்றங்கள் வெளியாகி வைரல் ஆகியிருக்கின்றன.

2027 ஜனவரி 21-இல் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு வழக்கம்போல் அவரே முதன்மை இசையமைப்பாளர்.

SCROLL FOR NEXT