டெல்லி காற்று மாசுபாடு மோசமாகி வருவது தொடர்பாக நடிகை கீர்த்தி சனோன் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
டெல்லியில் காற்று மாசு மிக அதிகம். அதுவும் குறிப்பாக குளிர் காலங்களில் டெல்லியில் காற்று மாசும், பனி மூட்டமும் சேர்ந்து மக்களுக்கு கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதற்கு வாகனப் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பதனால் ஏற்படும் புகை காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கீர்த்தி சனோனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, “எதையும் சொல்வது உதவாது என நினைக்கிறேன். ஏனென்றால் காற்று மாசுபாடு மோசமாகிக் கொண்டே போகிறது. நான் டெல்லியைச் சேர்ந்தவள். முன்பு எப்படி இருந்தது என்று எனக்குத் தெரியும்.
தற்போது காற்று மாசு மோசமாகிக் கொண்டே போகிறது. அதை தடுக்க ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் அவை நம் அருகில் யார் நின்றாலும் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு நிலையை எட்டும்” என்று வேதனையுடன் பதிலளித்துள்ளார்.