பாலிவுட்

3 பாகங்​களாக உரு​வான ‘கிருஷ்ணாவ​தா​ரம்’

நிலா

கிருஷ்ணரின் வாழ்க்​கை​யைச் சித்​தரிக்​கும் வகை​யில் உருவாகியுள்ள திரைப்​படம், ‘கிருஷ்ணாவ​தா​ரம்’. 3 பாகங்​களாக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை ஹர்​திக் கஜ்ஜார் இயக்​கி​யுள்​ளார்.

கிருஷ்ண​ராக சித்​தார்த் குப்​தா, சத்​ய​ பா​மா​வாக சம்​ஸ்​கிருதி ஜெய​னா, ராதை​யாக சுஷ்மிதா பட், ருக்​மிணி​யாக நிவாஷினி கிருஷ்ணன் ஆகியோர் நடித்​துள்​ளனர். இதை கிரியேட்​டிவ்​லேண்ட் ஸ்டூடியோஸ் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் சஜன் ராஜ் குரூப், ஷோபா சாந்த் தயாரித்​துள்​ளனர். பிர​சாத் சாஷ்டே இசையமைத்​துள்​ளார்.

அவர் இசை​யில் உரு​வாகி​யுள்ள ‘பிரேம் கி லீலா’ என்ற பாடல் வெளி​யிடப்​பட்டு வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. இந்தி, தமிழ் உள்பட பல்​வேறு மொழிகளில் மே 7-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் ஆங்கிலப் பதிப்பு 2 வாரங்​களுக்​குப் பிறகு, அமெரிக்​கா, இங்கிலாந்​து, கனடா ஆகிய நாடு​களில் வெளி​யாகும்.

SCROLL FOR NEXT